< Back
மாநில செய்திகள்
சைதாப்பேட்டையில் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

சைதாப்பேட்டையில் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
24 March 2023 12:21 PM IST

சைதாப்பேட்டையில் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை சைதாப்பேட்டை சாலையார் காலனி பொத்தமேடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் என்ற பவித்ரா (வயது 27). இவர் திருநங்கை ஆவார். பவித்ரா நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பவித்ராவுக்கு பணம் கொடுக்கல்-வாங்குதலில் பிரச்சினை இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்