< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை
கரூர்
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை

தினத்தந்தி
|
22 Oct 2023 12:06 AM IST

குளித்தலை காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் தண்ணீரில் 40 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை காவிரி ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் அந்த திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, திருநங்கை யார்?, தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?. தற்கொலையா? கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் திருநங்கை பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்