< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது
திருச்சி
மாநில செய்திகள்

வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது

தினத்தந்தி
|
1 Oct 2022 1:59 AM IST

வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் எருக்குமணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவர் சம்பவத்தன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள புதுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள் ஆறுமுகத்திடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் தகாத வார்த்தையில் திட்டி, அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்ற கேசவன் என்ற திருநங்கையை கைது செய்தார். மேலும் கருமண்டபம் பகுதியை சேர்ந்த கார்த்திகா, ரேஷ்மா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்