காஞ்சிபுரம்
டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து
|காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னயங்குளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னயங்குளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகலில் டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் யாரும் வருகை தந்து டிரான்பார்மரை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
டிரான்பார்மர் அருகே குடியிருப்புகளில் வசித்து வந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்ததால் அந்த பகுதியில் 1½ மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.இதுகுறித்து காஞ்சீபுரம் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.