< Back
மாநில செய்திகள்
ராயபுரத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது
சென்னை
மாநில செய்திகள்

ராயபுரத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
22 July 2023 12:37 PM IST

ராயபுரத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததில் 500 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ராயபுரம்,

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பழைய போலீஸ் நிலையம் பின்புறத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து எஸ்.எம்.செட்டி தெரு, பி.வி.கோவில் தெருவில் உள்ள 500 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நேற்று திடீரென்று அந்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ராயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் நீண்டநேரம் போராடி டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் மின்வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியில் 500 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முரளி மற்றும் மின்சார ஊழியர்கள் தீயில் எரிந்து நாசமான வயர்களை உடனடியாக மாற்றி சீரமைத்தனர். இதையடுத்து மீண்டும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்