< Back
மாநில செய்திகள்
தளக்காவூர் ஊராட்சி பகுதியில் அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்
சிவகங்கை
மாநில செய்திகள்

தளக்காவூர் ஊராட்சி பகுதியில் அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்

தினத்தந்தி
|
27 April 2023 12:15 AM IST

தளக்காவூர் ஊராட்சி பகுதியில் அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி

கல்லல் ஊராட்சி ஒன்றியம் தளக்காவூர் ஊராட்சி மேலக்குடியிருப்பு மக்கள் தங்கள் பகுதியில் புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையொட்டி தளக்காவூர் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி, முயற்சி மேற்கொண்டு மின்வாரிய அதிகாரிகளிடம் கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்களின் தேவைக்கேற்ற புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. மின்வாரிய செயற்பொறியாளர் லதா மின் மாற்றியின் இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தளக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் ஆரோக்கியசாமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவிப்பொறியாளர் எடிசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்