< Back
மாநில செய்திகள்

சிவகங்கை
மாநில செய்திகள்
புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

8 Dec 2022 12:15 AM IST
புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கழுகேர்கடை கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக கூடுதலாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்து புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார்.
விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) உலகப்பன், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் தஸ்லீம், ஈஸ்வரன், சுப்பையா, கழுகேர்கடை ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) ரேவதி, ஊராட்சி இரண்டாம் நிலை முகமது ஷெரிப், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, திருப்புவனம் பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.