தர்மபுரி
தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில்ரூ.9¼ லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
|தர்மபுரி:
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் எச்சனஅள்ளி ஊராட்சி, தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில் ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி திறன்கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி டிரான்ஸ்பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். விழாவில் மின்சார வாரிய செயற்பொறியாளர் பூவரசன், உதவி பொறியாளர் மோகனா, ஊராட்சி மன்றத்தலைவர்கள் லிங்கம்மாள், சிலம்பரசன், அழகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் தவமணி, ஆறுமுகம், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி துணைத்தலைவர்கள் ராஜகோபால், ரஞ்சித்குமார், வார்டு உறுப்பினர் வீரமணி, கட்சி நிர்வாகிகள் சின்னசாமி, குமார், முருகன், சிவகுரு மற்றும் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.