< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் பணியிடமாற்றம்
|5 Sept 2023 11:41 PM IST
சோளிங்கரில் ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக பாபு என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் சாதி பாகுபாடு காட்டுதல், பெண் ஆசிரியர்களை கீழ்தரமாக பேசுவது உள்ளிட்ட மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணிமேகலை, மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலாளர் அமர்நாத், மாவட்ட பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பாபுவை திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.