விருதுநகர்
நகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்
|நகராட்சிகளில் பணியாற்றும் 60 இளநிலை உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் பிரபாவதி, கோவில்பட்டி நகராட்சி உதவியாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். விருதுநகர் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பிச்சம்மாள், விருதுநகர் நகராட்சியில் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாத்தூர் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பிரபாவதி விருதுநகர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் அப்துல் காதர் பாசில் கோவில்பட்டி நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
விருதுநகர் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் நாகராஜன் விருதுநகர் நகராட்சியில் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி, அருப்புக்கோட்டை நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக நியமனம் பெற்றுள்ளார். அருப்புக்கோட்டை நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் மீனாட்சி சுந்தரம், அருப்புக்கோட்டை நகராட்சியில் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் அமுதா, செங்கோட்டை நகராட்சி உதவியாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் தட்டச்சராக பணியாற்றும் பத்மபிரியா, அருப்புக்கோட்டை நகராட்சியில் உதவியாளராகவும், அருப்புக்கோட்டை நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் மாலதி குழித்துறை நகராட்சிக்கு உதவியாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார் இதற்கான உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.