< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
7 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
|23 Aug 2023 12:23 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பகண்டை கூட்டுரோட்டுக்கும், கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும், கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வரஞ்சரத்திற்கும், வரஞ்சரம் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் கரியாலூருக்கும், மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் திருக்கோவிலூருக்கும், திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வெளியிட்டுள்ளார்.