< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் 6 பேர் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் 6 பேர் பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
3 July 2023 11:38 PM IST

கிராம நிர்வாக அலுவலர்கள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பொன்னமராவதி தாலுகாவில் பணியாற்றிய 6 கிராம நிர்வாக அலுவலர்களை கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம் செய்து இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மறவாமதுரையில் பணியாற்றிய சண்முகம் பொன் மேற்கிற்கும், நெருஞ்சிக்குடியில் பணியாற்றிய முருகேசன் மறவாமதுரைக்கும், மூலங்குடியில் பணியாற்றிய ரெங்கராஜன் பொன் கிழக்கிற்கும், பொன் கிழக்கில் பணியாற்றிய ஜெயந்தி மூலங்குடிக்கும், நல்லூரில் பணியாற்றிய அகஸ்தியன் நெருஞ்சிகுடிக்கும், பொன் மேற்கில் பணியாற்றிய ராஜேஸ்வரி நல்லூருக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்