< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் -கமிஷனர் உத்தரவு
|29 Nov 2023 5:25 AM IST
சென்னையில் நேற்றிரவு 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னையில் நேற்றிரவு 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார். கொத்தவால்சாவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக தீபக் குமார், புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பிரவீன்குமார், நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக செல்வகுமார், திருவான்மியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பதவிக்கு மணிவண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.