< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
மாநில செய்திகள்

தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

தினத்தந்தி
|
24 Dec 2023 9:57 AM IST

தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி.க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

* அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருவள்ளூர் மாவட்ட மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்