< Back
மாநில செய்திகள்
300 போலீசார் பணி இடமாறுதல்
மதுரை
மாநில செய்திகள்

300 போலீசார் பணி இடமாறுதல்

தினத்தந்தி
|
26 Nov 2022 1:47 AM IST

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 300 போலீசார் பணி இடமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டது.

ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி மதுரை மாநகர போலீசில் அவ்வாறு பணியாற்றி வரும் 300 போலீசாரை இடமாற்றம் செய்வது தொடர்பாக போலீசாரிடம் குறை கேட்கும் கூட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமை தாங்கி போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது போலீசாரின் உடல்நிலை மற்றும் அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் அடிப்படையில் அந்தந்த போலீசாருக்கு தேவையான இடங்களுக்கு பணிமாறுதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் அதிகம் பேர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், அடுத்தப்படியாக குற்றப்பிரிவுக்கும், போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் போலீசார் அவர்கள் தெரிவித்த விருப்பத்தின் படி பொது பணிமாறுதல் வழக்கப்பட்டதாகவும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசபெருமாள், மோகன்ராஜ், ஆறுமுகச்சாமி, வனிதா, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்