< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
|23 Feb 2023 9:48 PM IST
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.
சென்னை ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்துவரும் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் ஆவடி காவல் சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.