< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு
|7 July 2023 6:40 AM IST
தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தலைமை செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.
அதன்படி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருவாய் துறை இணை ஆணையர் சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.