< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகள் மாற்றம்
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகள் மாற்றம்

தினத்தந்தி
|
13 Jun 2022 3:50 AM IST

தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைக்க மாவட்ட வருவாய் அதிகாரியாக திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரெயில் நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அதிகாரி சத்தியநாராயணன் சேலம் ஆவின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்று 19 பேர் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், நெல்லை, மதுரை, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 துணை கலெக்டர்களை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்