< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
9 July 2024 7:55 PM IST

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழக காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பிரேமானந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜெயராமன் மாநில குற்ற ஆவண பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐ.ஜி.யாக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்