< Back
மாநில செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் -  தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
11 Oct 2023 9:58 PM IST

16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

16ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

*குடிமைப் பணிகள் சி.ஐ.டி டிஜிபி வன்னியப்பெருமாள், ஊர்க்காவல் படை கமாண்டண்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*தமிழ்நாடு போலீஸ் அகாடமி இணை இயக்குநர் ஐ.ஜி ஜோஷி குமார் ஐபிஎஸ், குடிமைப் பணிகள் சிஐடி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை டிஜிபி தலைமையக எஸ்.பியாக தீபா சத்யன் நியமனம்

*சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

*காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐஜி தமிழ் சந்திரன் ஐபிஎஸ், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*செந்தில் குமாரி ஐபிஎஸ், சென்னை குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சாம்சன் ,சென்னை போதைப்பொருள் தடுப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

*தென்காசி எஸ்.பியாக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

*நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*நெல்லை மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

*காத்திருப்பு பட்டியலில் இருந்த தீஷா மிட்டல் ஐபிஎஸ், சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவுக்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

*டி.என்.ஹரி கிரண் பிரசாத், கடலோர பாதுகாப்பு படை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.(ராமநாதபுரம்).

*பி.சுந்தரவடிவேல் நீலகிரி மாவட்டம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

*பி.சாமூண்டீஸ்வரி, சென்னை டிஜிபி காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்