விழுப்புரம்
4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 11 போலீசார் இடமாற்றம்
|விழுப்புரம் மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 11 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு நல்லாண்பிள்ளைபெற்றால் போலீஸ் நிலையத்திற்கும், கோட்டக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விழுப்புரம் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், வளவனூர் ஏட்டு முரளி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸ்காரர் சிவக்குமார், நல்லாண்பிள்ளை பெற்றால் போலீஸ்காரர் சண்முகம் ஆகிய இருவரும் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், வானூர் போலீஸ்காரர் முருகானந்தம் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட 11 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பிறப்பித்துள்ளார்.