கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்10 தாசில்தார்கள் இடமாற்றம்கலெக்டர் உத்தரவு
|கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
கிருஷ்ணகிரி தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) விஜயகுமார் கிருஷ்ணகிரி தாசில்தாராகவும், ஓசூர் தனி தாசில்தார் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) சிவசந்திரன் அஞ்செட்டி தாசில்தாராகவும், ஓசூர் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பரிமேழலகன் தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை-844 தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி பர்கூர் தாசில்தாராகவும், பர்கூர் தாசில்தார் திலகம், ஓசூர் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) தனி தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி கிருஷ்ணகிரி தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், சிறப்பு திட்ட செயலாக்கம் தனி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் அனிதா, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை-844 தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், சிறப்பு திட்ட செயலாக்கம் தனி தாசில்தார் விஜயலட்சுமி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், அஞ்செட்டி தாசில்தார் மோகன், போச்சம்பள்ளி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் உத்தரவு
இதை தவிர தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி துணை கலெக்டராக பணியாற்றி வரும் தாட்சாயணி, பர்கூர் தாசில்தாராக வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி வரை பொறுப்பு வகிப்பார். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.