< Back
மாநில செய்திகள்
திடீரென மயக்கம் அடைந்த டி.ராஜேந்தர்... நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு...!
மாநில செய்திகள்

திடீரென மயக்கம் அடைந்த டி.ராஜேந்தர்... நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு...!

தினத்தந்தி
|
30 Dec 2023 5:33 PM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் டி.ராஜேந்தர் நிவாரண பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி,

தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பினர்கள் தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அவர் திடீரென மயக்கம் அடைத்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்து காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்