< Back
மாநில செய்திகள்
தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து

தினத்தந்தி
|
22 Nov 2023 12:05 AM IST

அரியானா மாநிலம் பல்வால்- உத்தரபிரதேச மாநிலம் மதுரா இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை,

தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரியானா மாநிலம் பல்வால்- உத்தரபிரதேச மாநிலம் மதுரா இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வடமாநிலங்களுக்கு செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு டெல்லி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12269) அடுத்த ஆண்டு ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.05 மணிக்கு டெல்லி நிஜாமுதீன் (12433) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 2 மற்றும் 4-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து இரவு 7.10 மணிக்கு நிஜாமுதீன் (12641) செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 10, 12,17,19,24,26,31 மற்றும் பிப்ரவரி 2-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

கோவையில் இருந்து மாலை 4.15 மணிக்கு நிஜாமுதீன் கொங்கு (12647) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 21, 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து இரவு 12.55 மணிக்கு நிஜாமுதீன் (12651) செல்லும் அதிவேக ரெயில் ஜனவரி 14,16,21,23,28,30 மற்றும் பிப்ரவரி 4-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு சண்டிகர் (12687) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 10,14,17,21,24,28 மற்றும் 31-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு அந்தமான் (16031) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 10, 11, 14, 17, 18, 21, 24, 25, 26, 31 மற்றும் பிப்ரவரி 1, 4-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையில் இருந்து மாலை 5.35 மணிக்கு கத்ரா (16787) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 8, 15,22,29-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்