< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று: பாம்பன் பாலத்தில் ஊர்ந்த செல்லும் ரெயில்கள்

தினத்தந்தி
|
7 Aug 2022 4:45 PM IST

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் ரெயில்கள் மிகவும் பாதுகாப்பாகவும் குறைவான வேகத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனிடையே பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் பாலத்தில் இயக்கப்பட்டு வரும் அனைத்து ரெயில்களும் மிகவும் பாதுகாப்பாகவும் குறைவான வேகத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஒரு வித திகில் உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்