< Back
மாநில செய்திகள்
தர நிர்ணய குழு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தர நிர்ணய குழு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
10 Sep 2022 5:47 PM GMT

தர நிர்ணய குழு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளியின் இந்திய தர நிர்ணய குழு அமைக்க கூட்டமும், தர கட்டுப்பாடு குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியும் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை தமயந்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தர நிர்ணய கழகம் மதுரை கிளையின் உயர் அலுவலர் சிவக்குமார், அறிவியல் விஞ்ஞானி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளிடையே ரமேஷ் பேசுகையில், தர நிர்ணய அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றியும், பொருட்களின் தரம் பற்றியும், ஐ.எஸ்.ஐ. மற்றும் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். சில தர நிர்ணய முறைகளை விளக்கி சிவக்குமார் பேசினார். இந்திய தர நிர்ணய கழக வழிகாட்டி ஆசிரியரும், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியருமான காமராஜ் பேசுகையில், மாணவ-மாணவிகளிடையே ஒரு பொருளை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ளதா? மற்றும் சந்தையில் விற்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் தரம் வாய்ந்த பொருளா? என்பதனை கவனித்து வாங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம் என்ற தலைப்பில் குழுக்களாக பிரித்து போட்டி தேர்வு நடைபெற்றது. தேர்வில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரம், ரூ.750, ரூ.500 வீதமும் மற்றும் 4-ம் இடத்தை பிடிப்பவருக்கு ஆறுதல் பரிசாக ரூ.250-ம் வழங்கப்பட உள்ளது. முன்னதாக கணித பட்டதாரி ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். முடிவில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்