< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
10 Nov 2022 6:45 PM GMT

தியாகதுருகம் மற்றும் சின்னசேலத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

சின்னசேலம்,

சின்னசேலம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடந்தது. இதற்கு சின்னசேலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் தனபால், கென்னடி இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் ஆகியோர் பயிற்சியை மேற்பார்வையிட்டனர். இதில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றி பயிற்சியாளர்கள் விளக்கி கூறினர். இதேபோல் சின்னசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே விருகாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் வட்டார ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி, வட்டார இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இடநிலை ஆசிரியர்கள் வெங்கடேசன், ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு புரியும் வகையில் விளையாட்டு, நாடகம், கதைகள் மூலம் எவ்வாறு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ஷெர்லின் மேரி, மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தராஜ், ராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்