< Back
மாநில செய்திகள்
டிரோன் மூலம் நெற்பயிருக்கு  மருந்து தெளிப்பது குறித்த பயிற்சி
கடலூர்
மாநில செய்திகள்

டிரோன் மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிப்பது குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
21 July 2022 4:34 PM GMT

காட்டுமன்னார்கோவில் அருகே டிரோன் மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிப்பது குறித்த பயிற்சி நடந்தது.

காட்டுமன்னார்கோவில்,

விருத்தாசலம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் கீழ்கொள்ளிடம் உபவடிகால் பகுதி நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் நெற்பயிருக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்த பயிற்சி நடந்தது. இதற்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் டிரோன் மூலம் நெற்பயிருக்கு எவ்வாறு மருந்து தெளிக்க வேண்டும் என்பது பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் டிரோன் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

புதிய நெல் ரகங்கள்

தொடர்ந்து புதிய நெல் ரகங்கள், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வேளாண் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், நீர்வள, நிலவள திட்ட பொறுப்பு விஞ்ஞானி அரிசுதன், காட்டுமன்னார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர் பழனிவாசகன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விதை அலுவலர் அருள் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்