< Back
மாநில செய்திகள்
உழவன் செயலி குறித்து பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உழவன் செயலி குறித்து பயிற்சி

தினத்தந்தி
|
1 March 2023 6:45 PM GMT

நெடுமானூரில் உழவன் செயலி குறித்து பயிற்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் உழவன் செயலியின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் நாகராஜ் தலைமை தாங்கினார். பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முகமதுநாசர் வரவேற்றார். உழவன் செயலியின் செயல்பாடுகள், இயற்கை விவசாயம், சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், மண்மாதிரி சேகரிப்பின் அவசியம், வேளாண்துறை மானிய திட்டங்கள் குறித்து அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா எடுத்துக்கூறினார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார்லோகப்பிரியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்