< Back
மாநில செய்திகள்
நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி
கடலூர்
மாநில செய்திகள்

நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி

தினத்தந்தி
|
8 Jan 2023 6:45 PM GMT

கோபாலபுரத்தில் நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடந்தது.

கம்மாபுரம்,

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நீர் வள, நில வள திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் ஊரக பங்கேற்பு மதிப்பீடு பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் தவப்பிரகாஷ் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். கால்நடை மருத்துவர் கோமகன் கலந்து கொண்டு கால்நடை பாராமரிப்பு மற்றும் கால்நடை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பேசினார். வேளாண் விஞ்ஞானிகள் பாஸ்கரன், பாரதிக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் சுதமதி, வேளாண் அலுவலர் ரத்னா, உதவி வேளாண்மை அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் மண் மற்றும் நீர் பரிசோதனை முறை, நெல்லில் நாற்றாங்கால் தயாரிப்பு, நடவு நிலம் தயாரிப்பு, பசுந்தாள் உரமிடுதல், ஒருங்கிணை உர நிர்வாகம், களை நிர்வாகம், அசோலா வளர்ப்பு முறை, சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, நெல்லில் பாரம்பரிய ரகங்கள், விதை உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் உதவி திட்ட அலுவலர்கள் செல்வமணி, மகாதேவன், நவின்குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு பயிற்சியில் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள வளங்கள், பயிர் செய்யும் முறை உள்ளிட்டவை பற்றி அன்பில் தர்மலிங்கம் மற்றும் ஜே.எஸ்.ஏ. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் வரைபடம் மூலம் விளக்கமளித்தனர்.

மேலும் செய்திகள்