< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி
|25 March 2023 6:45 PM GMT
பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி
குடவாசல் அருகே உள்ள சிமிழி கிராமத்தில் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி நடந்தது. குடவாசல் வேளாண்மை இயக்குனர் வரவேற்றார். இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் கலந்துகொண்டு பருத்தி தொழில்நுட்பத்திற்கான கையேடுகளை வழங்கினார். பின்னர் பருத்திக்கான இடுபொருட்கள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை இணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, விதை சான்று அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.