< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
26 Feb 2023 6:37 PM GMT

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுதா தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் நவநீதசோழன் முன்னிலை வகித்தார். இல்லம் தேடி கல்வித்திட்ட வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மணி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார். அரும்பாவூர், பூலாம்பாடி, வெங்கலம், அனுக்கூர், வாலிகண்டபுரம், வி.களத்தூர், கை.களத்தூர் ஆகிய மையங்களில் உள்ள 250 தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை, பள்ளி மேலாண்மை கூட்டங்களில் பங்கேற்றல், வருகை பதிவு செய்து பதிவிடல் மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முடிவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி புத்தகம், அறிவுத்திறன் அட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்