< Back
மாநில செய்திகள்
தேசிய திறன் ஆய்வு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

தேசிய திறன் ஆய்வு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
12 Aug 2023 6:33 PM GMT

தேசிய திறன் ஆய்வு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமாக கிராமப்புறங்களில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பது குறித்து கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டார நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய திறன் ஆய்வு அணுகு முறை பயிற்சி, மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.

மாவட்டக்கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் மாரையன் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்