< Back
மாநில செய்திகள்
நான் முதல்வன் திட்டம் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

நான் முதல்வன் திட்டம் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
24 Nov 2022 6:04 PM GMT

நான் முதல்வன் திட்டம் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டம் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், இந்த திட்டத்தின் நோக்கம் பற்றியும், அரசு பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொண்டு இருப்பதையும், இந்த பயிற்சியை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் 2 வாரங்களுக்கு ஒரு பாட வேலை என்ற கணக்கில் மாணவர்களுக்கு மேற்படிப்பு பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்றும் கூறினார். மேலும், தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் வெளிமாநிலங்களில் உயர் கல்வி பயின்றால் அவர்களுக்கான கல்லூரி மற்றும் விடுதி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டது. பயிற்சியில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 37 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்