< Back
மாநில செய்திகள்
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பஞ்சாயத்து செயலர்களுக்கு பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பஞ்சாயத்து செயலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
24 Dec 2022 6:45 PM GMT

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பஞ்சாயத்து செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசி

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பஞ்சாயத்து செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிராம பஞ்சாயத்துகள்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் 54 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது. இந்த நிலையில் சில கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினரின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு அதற்கான பயிற்சி முகாம் நேற்று சிவகாசி யூனியன் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் யூனியன் துணைத் தலைவர் விவேகன்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பஞ்சாயத்து நிர்வாகங்கள் காய்ச்சல் தடுப்பு பணியினை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குடிநீர் வினியோகத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஆபரேட்டர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சை பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் வைரக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் மோகன், ராமமூர்த்தி, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதாரத்துறை அதிகாரி சீனிவாசன், 54 கிராம பஞ்சாயத்து செயலர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்