< Back
மாநில செய்திகள்
பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
2 March 2023 6:45 PM GMT

கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாலசந்தர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் குடிமைப்பணி அலுவலர் ஷாந்திபிரியா ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. .இந்நிலை இப்படியே தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் திருமண வயது இருக்கும் ஆண்களுக்கு பெண் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். இதன் விளைவாக பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கும். எனவே பெண் குழந்தைகளின் பிறப்பு சதவிகிதத்தை அதிகரித்திட நாம் பெண்குழந்தைகள் பிறப்பினை கொண்டாட வேண்டும். மகளையும், மகனையும் சமமாக கருதிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்திட வேண்டும். குழந்தைகளுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்து கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் பெண்குழந்தைகள் சுமை என்ற மனநிலையை கைவிட்டு உரிய கல்வி அளிக்கும் பட்சத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள் என்றார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்