< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
|18 Oct 2023 10:55 PM IST
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆசிரியர்களுக்கு மதிப்பீடு, புத்தக வாசிப்பு மற்றும் சிறார் இதழ் பற்றியும், ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவை கருத்தாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. .இப்பயிற்சியினை லட்சுமி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். கரூர் வட்டார வளமேற்பார்வையாளர் (பொறுப்பு) சத்தியவதி பயிற்சியினை ஒருங்கிணைப்பு செய்தார்.