< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
|29 Aug 2022 11:58 PM IST
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் பராமரிப்பு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ராஜேந்திரன், நடேசன், கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குனர் சுரேஷ், பயிற்சி நிலைய பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் விவசாய விளைபொருட்களை சேமிப்பு கிடங்கில் பராமரித்தல் குறித்து பயிற்சியளித்தனர்.
முகாமில் துணைப்பதிவாளர்கள் ஆரோக்கியராஜ், கமலக்கண்ணன், வசந்தலட்சுமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.