< Back
மாநில செய்திகள்
கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
1 Sep 2023 6:43 PM GMT

கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் வட்டாரம், வேளாண்மைத்துறை சார்பில் பிள்ளாபாளையம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கி வேளாண்மைத் துறையில் செயல்பட்டு வரும் திட்டங்கள், இடு பொருட்களின் இருப்புநிலை, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம், உழவன் செயலின் பயன்பாடுகள், இடுபொருட்கள் முன்பதிவு செய்யும் முறை, உயிர் உரங்களின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்து கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளிகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தொடர்ந்து வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி திருமுருகன் இயற்கை விவசாயத்தின் நன்மைகள், பூச்சி நோய் மேலாண்மை, அறுவடை பின் செய் நேர்த்தி முறைகள், வேளாண்மையில் மாற்றுப் பயிரின் வழிமுறைகள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்