< Back
மாநில செய்திகள்
தென்னை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தென்னை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
9 Nov 2022 6:45 PM GMT

தென்னை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பனைக்குளம்

மண்டபம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட தேர்போகி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது. பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கண்ணையா முன்னிலை வகித்தார். அப்போது அவர் விவசாயிகளிடையே தென்னைக்கு உர நிர்வாகம் செய்வதன் அவசியம் மற்றும் தென்னைக்கு நுண்ணூட்டத்தினை வழங்குவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். இதேபோல் குயவன்குடி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், அருணாச்சலம் ஆகியோர் தென்னை சாகுபடியில் காண்டா மிருகவண்டு மற்றும் சிவப்புக்கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் தென்னையை அதிகளவில் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ-யை கண்டறிந்து அதனை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.

திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால், தென்னைக்கு பயிர்காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து பேசினார். உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, வேளாண்மை அலுவலர் ஜெயமணி ஆகியோர் தென்னை மட்டைகள் மற்றும் காய்ந்த தென்னை ஓலைகளை தென்னை மரத்தடியில் சுற்றிலும் நிலப்போர்வை போன்று அமைக்கும் முறையை செய்முறை விளக்கம் செய்து காட்டினர்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் தென்னை ரூகோஸ் சுருள், வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்து தொழில்நுட்ப துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் மோகன் குமார், முன்னாள் கவுன்சிலர் பானுமதி கணேசன், துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிரஞ்சீவி, யோகலட்சுமி, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்