< Back
மாநில செய்திகள்
இணைய வழியில் வழக்குகளை பதிவு செய்யும் முறை குறித்து வக்கீல்களுக்கு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

இணைய வழியில் வழக்குகளை பதிவு செய்யும் முறை குறித்து வக்கீல்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
5 Aug 2023 3:48 PM GMT

இணைய வழியில் வழக்குகளை பதிவு செய்யும் முறை குறித்து வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் இணைய வழியில் வழக்குகளை பதிவு செய்யும் முறை குறித்த பயிற்சி வக்கீல்களுக்கு அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட நீதிபதியை சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- நீதித்துறையில் தற்போது வழக்குகளை இணைய வழியில் பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிறது 17-ந்தேதி முதல் கமர்சியல் வழக்குகள் இணைய வழியில் பயன்படுத்தப்படும் முறைவர உள்ளது.

படிப்படியாக நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இணைய வழியில் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வரும். இந்த முறை இளம் வக்கீல்களுக்கு நல்ல ஒரு பயனுள்ள வழியாக இருக்கும். அவர்களின் பயன்பாடு மூத்த வக்கீல்களுக்கு அதிகம் தேவைப்படும். புதிதாக வழக்குகளை இணைய வழியில் பதிவு செய்யும்போது சில சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அந்த சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும். இணைய வழியில் வழக்குகளை பதிவு செய்யும் பொழுது எந்த நீதிமன்ற வழக்குகளையும் பதிவு செய்யலாம், எங்கிருந்து வேண்டுமானாலும் மட்டுமல்லாமல் இரவு 12 மணி வரையிலும் கூட வழக்குகளை பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறைக்கு அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும், என்றார். தொடர்ந்து கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அம்பிகா, காசோலை விரைவு வழக்கு நீதிமன்ற நீதிபதி நித்தியா ஆகியோர் வழக்குகளை இணையவழியில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து காணொலிக்காட்சி மூலம் வக்கீல்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் குளித்தலை நீதிமன்ற நீதிபதிகள் சண்முககனி, பாலமுருகன், பிரகதீஸ்வரன், வக்கீல் சங்கத் தலைவர் சாகுல்அமீது, நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்