< Back
மாநில செய்திகள்
இயற்கை முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி
கடலூர்
மாநில செய்திகள்

இயற்கை முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
15 Aug 2022 7:57 PM GMT

வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பண்ருட்டி,

வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி (அட்மா) திட்டத்தின் கீழ் பண்ருட்டி அருகே ராயர்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

இதில் ரூப்சந்த், கெண்டை, ரோகு, மிர்காள், புல் கெண்டை போன்ற மீன் வகைகளை ஜீவாமிர்தம் என்கிற இயற்கை முறையில் வளர்க்கலாம். இதன் மூலம் குறைந்த இடத்தில் மீன்களை வளர்த்து அதிக அளவில் லாபம் பெறலாம் என உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். .முடிவில் வேளாண் அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தொழில் நூட்ப மேலாளர் மணிகண்டன், உதவி நுட்ப மேலாளர் ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்