< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
கழிவுநீர் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி
|7 Aug 2023 7:00 PM GMT
மயிலாடுதுறையில் கழிவுநீர் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் கழிவுநீர் வாகன உரிமையாளர், ஓட்டுனர், உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடந்தது.தஞ்சாவூர் நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்கனரக உத்தரவின்படி மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி பகுதியில் கழிவுநீர் வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், உதவியாளர்களுக்கு நடந்த பயிற்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது, பாதுகாப்பு உபகரணங்களின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தூய்மை மற்றும் சுகாதார நிபுணர் ஆன்டிரியாஸ்ராஜன், நிர்வாக அலுவலர் ராம்குமார் ஆகியோர் கழிவுநீர் வாகன உரிமையாளர், ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட்பாஸ்கர்ராஜ், மின்னியல் கண்காணிப்பாளர் சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.