< Back
மாநில செய்திகள்
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
21 July 2023 7:15 PM GMT

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

குத்தாலம்;

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கண்காணிப்பு அலுவலர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமார், குத்தாலம் தாசில்தார் இந்துமதி, தனி தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் ராஜன், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, பயிற்சியாளர்கள் , வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்