< Back
மாநில செய்திகள்
கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
19 Jun 2022 4:29 PM GMT

சிக்கலில் பசுமை ஆலய திட்டம் குறித்து கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிக்கல்:

சிக்கல் சிங்காரவேலர் மற்றும் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில்களில் இந்து சமய அறநிலைத்துறை இணைந்து பசுமை ஆலய திட்டம் குறித்த பயிற்சி கோவிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியில் கோவிலை பசுமையாகவும், தூய்மையாக வைத்திருத்தல். கோவில்களில் உருவாகின்ற கழிவுகளை கோவில்களுக்கு உள்ளேயே இயற்கை முறைப்படி உரமாக்கி, கோவிலில் உள்ள மரங்களுக்கு பயன்படுத்துதல், மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தரம் பிரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கிராம நல சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்செல்வன், அலுவலக ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் ‌ சீனிவாசன், கோவில் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சிவனடியார்கள், அறநிலையத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பசுமை ஆலய திட்ட விளக்க கையேடு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்