அரியலூர்
ஆசிரியர்களுக்கு பயிற்சி
|ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியகம் ஆகியவற்றுடன் இணைந்து பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளிடையே பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் 48 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2-ம் ஆண்டாக செயல்படுத்தப்படவுள்ளது. அந்த மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இத்திட்டத்திற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சுரேஷ் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில்முனைவோர் நிறுவனத்தின் கள ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் செய்திருந்தார்.