< Back
மாநில செய்திகள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
9 Jun 2022 6:48 PM GMT

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி நடந்தது.

நொய்யல்,

கரூர் மாவட்டம் நொய்யல் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தை கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 144 தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்குப் பயிற்சி முடிந்தவுடன் பணியிடம் காலியாக உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்புப் பணிகள், நீச்சல், மலையேற்றம், யோகா மற்றும் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தின் முதல்வராக கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்