< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
2 Aug 2023 6:37 PM GMT

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

விராலிமலை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் குறித்து இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு விராலிமலை தாசில்தார் சதீஸ் தலைமை தாங்கி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நடைமுறை குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மின்னாளுமை மேலாளர் வடிவேல் காெணாலி காட்சி மூலம் தன்னார்வலர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சியளித்தார். பயிற்சியில் இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர், விராலிமலை வட்ட வழங்கல் அலுவலர் ஐஸ்வர்யா, தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் மற்றும் இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்