மயிலாடுதுறை
கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி
|கொள்ளிடம் அரசு கலைக்கல்லூரியில் கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கொள்ளிடம் வட்டார அளவில் 3,6,9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட உள்ள கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் முகுந்தகுமாரி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கோமதி பயிற்சியை தொடங்கிவைத்தார். பேராசிரியர் குமார்,ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கலந்து கொண்டு பேசினார் பேசுகையில், நவம்பர் 3-ந் தேதி மாநில அளவிலான மாணவர்கள் திறனறிவு தேர்வு நடத்தபட உள்ளது. இதில் கள ஆய்வாளர்களாக ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர்கள் இந்த தேர்வை சிறப்பாக நடத்த வேண்டும் என்றார். பயிற்சிக்கு கருத்தாளர்களாக குருகத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ராணி, மயிலாடுதுறை ஆசிரியர் பயிற்றுனர் திருசங்கு ஆகியோர் ஈடுபட்டனர். கள ஆய்வாளர்களாக செயல்பட உள்ள சுமார் 76 கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் மாணவி அபிஷேகா நன்றி கூறினார்.