< Back
மாநில செய்திகள்
வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
28 Jun 2022 7:56 PM GMT

வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரம் வேளாண்மை -உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் மொட்டை மாடி மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்த உள் மாவட்ட அளவிலான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி அறிவுரையின்படியும், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்கள் பாபு(மத்திய திட்டம்), கீதா(உழவர் பயிற்சி நிலையம்) ஆகியோரின் ஆலோசனை படியும் நடைபெற்ற இப்பயிற்சியில் ஆலத்தூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொட்டை மாடி காய்கறி தோட்டம் பற்றிய தொழில்நுட்பங்களை வாலிகண்டபுரம் ரோவர் வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் சங்கீதா விளக்கிக் கூறினார். இப்பயிற்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கீதா மற்றும் ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு மொட்டைமாடி காய்கறி தோட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள். இப்பயிற்சியில் மொட்டை மாடி காய்கறி தோட்டம் அமைப்பது பற்றிய செயல் விளக்கமும் விவசாயிகளுக்கு எளிதில் புரியும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை ஆலத்தூர் வட்டார அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்